ஆதின மடத்திற்கு செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினையை நித்யானந்தா ஏற்படுத்த கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

இளைய ஆதினம் என்ற எண்ணம் இல்லாமல் மதுரை ஆதின மடத்திற்கு செல்லாம் என நித்யானந்தாவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆதின மடத்திற்கு செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினையை நித்யானந்தா ஏற்படுத்த கூடாது - உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
x
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நித்யானந்தா தொடர்ந்து வழக்கில்,இளைய ஆதினம் என்ற முறையில் மதுரை
ஆதின மடத்திற்குள் தாம் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி முரளிதரன் முன்பு விசாரணைக்கு வந்தது.நித்யானந்தா ஆதின மடத்திற்குள் செல்லும் போது தனி மனிதனாக செல்ல வேண்டும்,  பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் கூட்டமாக செல்ல கூடாது என நீதிபதி உத்தரவிட்டார்.

இளைய ஆதினம் என்ற எண்ணம் இல்லாமல், இந்திய நாட்டின் குடிமகன் என்ற உரிமையில் மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.ஆதின மடத்திற்குள் செல்லும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினையை நித்யானந்தா ஏற்படுத்த கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை ஆதின மடத்திற்கு வரும் தேதியை விளக்கு தூண் காவல் ஆய்வாளரிடம் நித்யானந்தா முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும், இதன்படி ஆதின மடத்திக்குள் உரிய போலீஸ் பாதுகாப்பு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கை முடித்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்