குற்றாலத்தில் 5-வது நாள் நிகழ்ச்சியில் நீச்சல், வில்வித்தை போட்டி

நெல்லை மாவட்டம் குற்றாலம் சாரல் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் நீச்சல் மற்றும் வில்வித்தை போட்டி நடைபெற்றது.
குற்றாலத்தில் 5-வது நாள் நிகழ்ச்சியில் நீச்சல், வில்வித்தை போட்டி
x
குற்றாலம் சாரல் திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்ச்சியில் நீச்சல் மற்றும் வில்வித்தை போட்டி நடைபெற்றது. நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் சாரல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.  ஐந்தாவது நாள் நிகழ்ச்சியில் நேற்று நீச்சல் மற்றும் வில்வித்தை போட்டி நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மாலையில் கரகாட்டம், நாதஸ்வரம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்