கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்து வரும் மயில்களின் நடமாட்டம்

7200 அடி உயரத்தில் மயில்கள் வசிப்பது எப்படி? என சமூக நல ஆர்வலர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்து வரும் மயில்களின் நடமாட்டம்
x
சமீபகாலமாக கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான மயில்கள் உலா வருவதை காண முடிகிறது. மயில்கள் கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடிக்கு கீழே மட்டுமே வாழும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், சிறிய சிறிய மலைகள் சமதளப்பகுதிகளில் விரும்பி வசிக்கும் மயில்கள் கடல் மட்டத்தில் இருந்து 7 ஆயிரத்து 200 அடி உயரம் கொண்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.இவை எவ்வாறு வசிக்கின்றன என விலங்குகள் நல ஆர்வலர்கள் குழம்பிபோய் உள்ளனர். 

தட்ப  வெப்ப நிலை மாற்றத்தால் மயில்கள் இடம்பெயர்ந்திருக்கும் என  கூறப்பட்டாலும், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மயில்கள் மலைப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்திருக்கும் என  விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்