தூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்

தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி பகுதியில் குடிநீர் பாதிப்பு - மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புதல்
x
தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, தண்ணீரை குடிக்க முடியாத நிலை உருவாகி இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார். 

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு, எழுத்து மூலமாக அளித்த பதிலில், தூத்துக்குடி பகுதி தண்ணீரில் நச்சு பொருட்கல் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அர்ஜூன் ராம் தெரிவித்துள்ளார். நிலத்தடி நீரில் , இரும்பு, கேட்மியம், குரோமியம் , ஆர்சினிக் ஆகியவை அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும் நீர் வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே, மத்திய அரசு கொண்டு வர விருக்கும் அணை பாதுகாப்பு மசோதாவால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அர்ஜூன் ராம் திட்டவட்டமாக விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்