2-வது நாளாக சோதனை நீடிப்பு : "கட்டு கட்டாக பணம், தோண்ட தோண்ட தங்கம்" - வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்

2-வது நாளாக சோதனை நீடிப்பு : "கட்டு கட்டாக பணம், தோண்ட தோண்ட தங்கம்" - வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்
2-வது நாளாக சோதனை நீடிப்பு : கட்டு கட்டாக பணம், தோண்ட தோண்ட தங்கம் - வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்
x
அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம் பட்டி என்ற இடத்தில், நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யா துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில், 2 - வது நாளாக வருமான வரித்துறை சோதனை நீடித்து வருகிறது. மதுரை - கே.கே. நகரில் எஸ்.பி.கே ஹோட்டலில் நடந்த சோதனை, மாலையில் நிறைவடைந்தது. கமுதி அருகே செய்யாதுரையின் சொந்த கிராமத்திலும் அதிரடி சோதனை நீடித்தது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில், கட்டு கட்டாக பணம் - குவியல் குவியலாக தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் 170 கோடி ரூபாய் ரொக்கம் சிக்கியுள்ளதாகவும், 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.


வருமான வரி சோதனை : "விசாரணை தேவை" -  டாக்டர் அன்புமணி வலியுறுத்தல்

நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர் வீடுகளில் நடந்து வரும் வருமான வரி சோதனை குறித்து, விசாரணை தேவை என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். சேகர் ரெட்டி, ராம மோகன ராவ் உள்ளிட்டோர் வீடுகளில், இதுவரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வில்லை என்று அறிக்கையொன்றில், அவர் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளை கொண்ட பல்முனை விசாரணைக்குழுவை அமைத்து, முழுமையாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

வருமான வரித்துறை சோதனை - எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து

நெடுஞ்சாலைத்துறையின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்து, மறு டெண்டர் விட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக நீடித்த வருமான வரி சோதனை குறித்து அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டி உள்ள அவர், இந்த விவகாரத்தில் எழுந்துள்ள புகார்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புபோலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். வருமான வரித்துறையின் சோதனை, ஆச்சரியமூட்டுகிறது - அதிர்ச்சி அளிக்கிறது என்றும் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக வரலாற்றில், இது மோசமான கருப்பு அத்தியாயம் என்றும் மு.க. ஸ்டாலின் வர்ணித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்