தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் காவலர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் - உயர்நீதிமன்றம் அதிரடி
பதிவு : ஜூலை 07, 2018, 03:40 PM
10 ஆண்டுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்த காவலருக்கு காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை ஒரு மாதத்தில் வழங்க உத்தரவு
* தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள், காவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், பணியில் இருந்த போது இயற்கையாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் பெற உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு கமாண்டோ படை உதவி ஆய்வாளராக பணியாற்றிய நித்தியானந்தம், 2008 -ல் பணி நிமித்தமாக ஜோலார்பேட்டைக்கு ரயிலில் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கோரி நித்தியானந்தத்தின் மனைவி புவனேஸ்வரி அளித்த விண்ணப்பத்தை டி.ஜி.பி. நிராகரித்து உத்தரவிட்டார்.

* இந்த உத்தரவை எதிர்த்து புவனேஸ்வரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அவருக்கு காப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து உள்துறை செயலாளர் டி.ஜி.பி. தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

* விபத்துக்களில் சிக்குவோருக்கு மட்டுமே திட்டத்தின் பலன் எனக் கூறுவது, திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என தெரிவித்தனர். இந்த திட்டத்தின் பலன்கள் இயற்கையாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரும் பெற உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், 2009 முதல் 9 சதவீத வட்டியை கணக்கிட்டு, காப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்தில் புவனேஸ்வரிக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.

52 views

மதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்

மதுபோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ

369 views

18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

699 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

764 views

பிற செய்திகள்

கும்பகோணம் : விஷம் அருந்தி காதலர்கள் தற்கொலை முயற்சி

கும்பகோணம் அருகே குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

9 views

"நேர்மையான முறையில் இளைஞர்கள் வாக்களிக்க வேண்டும்" - ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்கள் அனைவரும் நேர்மையான முறையில் வாக்களிக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

25 views

நாகர்கோவில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

நாகர்கோவிலில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

8 views

ரூ.2000 பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை - பொதுமக்கள் சாலை மறியல்...

2000 ஆயிரம் ரூபாய் பெறும் பயனாளிகள் குறித்து அரசு முறையாக கணக்கெடுக்கவில்லை என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

35 views

போக்குவரத்து உதவி ஆய்வாளரை தாக்கிய காவல்நிலைய உதவி ஆய்வாளர்

சென்னை கோட்டையில் போக்குவரத்து உதவி ஆய்வாளராக இருப்பவர் பாலசுப்ரமணியம்.

8 views

ரூ.2,000 வழங்க பணியிடங்களை உருவாக்கவில்லை : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம்

2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அதற்கான பணியிடங்களை அரசு ஏற்படுத்தவில்லை என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.