நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது
நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி
x
நீட் - சிபிஎஸ்இ-க்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

நீட் தேர்வு வினாத்தாளின் தமிழ் மொழி பெயர்ப்பில் குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி.  டி.கே.ரங்கராஜன் ,  உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு தேர்வு முடிவுகளை முன்கூட்டியே சிபிஎஸ்இ வெளியிட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தனது தவறான கருத்தை சரி என ஆக்க முயற்சிப்பதுதான் சிபிஎஸ்இ யின் நிலைப்பாடா எனவும்  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சர்வாதிகாரி போல் சிபிஎஸ்இ செயல்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், பீகார் மாநிலத்தில் அதிக அளவு மாணவர்கள் வெற்றி பெற்றது எப்படி என்றும் கேள்வி கேட்டனர்.



தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - டி.கே.ரங்கராஜன்

சிபிஎஸ்இ தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளது நீதிமன்றம் எழுப்பிய கேள்வி மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி. டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்