"கேலியா பண்றீங்க..வரலாற்றை மாற்றி காட்டுவோம்.." - அடித்து சொன்ன பாபர் அசாம்

x

சாதனைகள் முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகின்றன என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறியுள்ளார். அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவரிடம், உலகக்கோப்பையில் 7 முறை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தான் கடந்த காலங்களில் நடந்தவற்றில் கவனம் செலுத்தவில்லை என்று கூறினார். கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதுபோல இப்போதும் தங்களால் வெல்ல முடியும் என்றும் பாபர் அசாம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்