டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புதிய சாதனை

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்...
x

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டின் புதிய சாதனை

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் சதமடித்து வெற்றிக்கு வழிவகுத்த ஜோ ரூட், போட்டியின்போது 10 ஆயிரம் ரன்களையும் கடந்தார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 14வது வீரர் என்ற பெருமையை ரூட் பெற்றுள்ளார். மேலும், அலெஸ்டையர் குக்கிற்குப் பிறகு 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ரூட் படைத்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்