பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..

பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முதன்முறையாக வெர்ஸ்டாப்பன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். எனினும் இந்த வெற்றி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.
பார்முலா ஒன் - வெர்ஸ்டாப்பன் சாம்பியன்..
x
ஒரு கட்டத்தில் ஹாமில்டன் முன்னிலை பெற்று வெற்றியை நெருங்கிக்கொண்டிருந்தார். வெற்றி வசமாகிவிடும் என ஹாமில்டன் ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க, அவர்களுக்கு கடைசி சுற்று அதிர்ச்சி கொடுத்தது.அதுவரை இரண்டாவதாக வந்துக்கொண்டிருந்த வெர்ஸ்டாப்பன், கடைசி சுற்றில் முன்னிலை பெற்று வெற்றி கோடையும் முதலாவதாக அடைந்து, சாம்பியன்ஷிப்பை தட்டி சென்றார். இதன்மூலம் பார்முலா ஒன் பட்டத்தை வெல்லும் முதல் நெதர்லாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார்
போட்டி முடிந்த பின்னர் வெர்ஸ்டாப்பனை சந்தித்து ஹாமில்டன் வாழ்த்து பரிமாறினாலும், அவர் சார்ந்த மெர்சிடஸ் அணி வெர்ஸ்டாப்பன் வெற்றிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது.போட்டியில் ஒரு கார் விபத்தில் சிக்கிய போது, நடுவர் விதிகளை மீறி கார்களை இயக்க அனுமதி வழங்கியதாக ஹாமில்டன் அணி புகாரை முன்வைத்தது..அந்த விபத்து நிகழும் வரை வெர்ஸ்டாப்பன் 5 இடங்களுக்கு பின்னால் வந்துக்கொண்டிருந்ததாகவும், ஆனால் நடுவரின் தவறான அறிவிப்பால், ஹாமில்டனை முந்த நேரிட்டதாகவும் கூறப்பட்டது.ஆனால் இந்த கோரிக்கைகளை ரத்து செய்த FIA அமைப்பு, முடிவை மாற்ற முடியாது என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.எனினும், இந்த முடிவை பலர் விமர்சித்து வருகின்றனர்.குறிப்பாக விபத்து நிகழாமல் இருந்திருந்தால் கோப்பை ஹாமில்டனுக்குதான் என சச்சின் டெண்டுல்கர் கருத்து கூறியது கவனம் பெற்றுள்ளதுசச்சின் மட்டுமல்லாமல் ஏராளமானோர் போட்டி முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்