வான்கடேவில் வரலாறு படைத்த அஜஸ் படேல்

மும்பையில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார்.
x
மும்பையில் நடைபெற்றுவரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில், நியூசிலாந்து வீரர் அஜஸ் படேல் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்து உள்ளார். இன்று காலை தொடங்கிய 2ம் நாள் ஆட்டத்திலும், சுழற்பந்து வீச்சாளர் அஜஸ் படேலிடம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். சஹா 27 ரன்களுக்கும் அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் அஜஸ் படேலின் சுழலுக்கு இரையாகினர். இதேபோல், மயங்க் அகர்வால் 150 ரன்களுக்கும், அக்சர் படேல் 52 ரன்களுக்கும் அவர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களும் அஜஸ் படேலின் மாயாஜால சுழலை எதிர்கொள்ள முடியாமல், அவரிடமே அவுட் ஆகினர். நேற்றைய ஆட்டத்தில் அஜஸ் படேல் 4 விக்கெட்டுகள் எடுத்திருந்த நிலையில், இன்று 6 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன்மூலம், இந்தியாவின் அனைத்து விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தினார். ஒரே இன்னிங்சில் பத்து விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மறைந்த இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர், முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ப்ளே ஆகியோர் இந்த சாதனையை ஏற்கனவே நிகழ்த்தி உள்ளனர். 10 விக்கெட்டுகளை வீழ்த்திய அஜஸ் படேல் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்