"என் இறுதி போட்டி சென்னையில் தான்"- சென்னை ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய தோனி
பதிவு : நவம்பர் 21, 2021, 12:04 AM
4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த‌து.
4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணிக்கு சென்னையில் நடந்த பாராட்டு விழா, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்புடன் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த‌து. 

சென்னை கலைவாணர் அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி, அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதேபோல இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்முதலில் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில்தேவ்,   பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎல் நிர்வாக தலைவர் பிரிஜேஷ் படேல், சென்னை அணியின் உரிமையாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் மேடையை அலங்கரித்தனர். விழாவின் தொடக்கத்திலே ஸ்டாலின் பெயர் மற்றும் தோனியின் விருப்ப எண்ணான 7 என்ற எண் பொறித்த ஜெர்சியை தோனி, முதலமைச்சருக்கு வழங்கி சுவாரஸ்யத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் சிஎஸ்கே வீர‌ர்களுக்கு பரிசுகளை வழங்கினார். 

இதன் பின்னர் ரசிகர்களின் பெரும் கரகோஷத்துக்கு நடுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேசத்தொடங்கினார். ஆரம்பம் முதல் இறுதி அவரை அவரது பேச்சில் தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவுக்கு பல விதங்களில் நன்றி தெரிவித்தார். இறுதியில் அடுத்த ஆண்டோ, இன்னும் 5 ஆண்டுகள் கழித்தோ, ஆனால் என் இறுதி போட்டி சென்னையில் தான் என அவர் கூறவே, ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றனர். 


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.