நியூசி.க்கு எதிராக முதல் டி20 போட்டி - புதிய கூட்டணி வரலாறு படைக்குமா?

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ரோகித் - ராகுல் திராவிட் கூட்டணி தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.
நியூசி.க்கு எதிராக முதல் டி20 போட்டி - புதிய கூட்டணி வரலாறு படைக்குமா?
x
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ரோகித் - ராகுல் திராவிட் கூட்டணி தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

உலகக்கோப்பை ஏமாற்றத்தோடு தாயகம் திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி, ஒரு வார இடைவேளைக்கு பின்னர் மீண்டும் களத்திற்கு திரும்பியுள்ளது

ஆனால், இந்த முறை அணி நிர்வாகத்தில் முற்றிலும் மாற்றம்... ரவிசாஸ்திரி விடைபெற்றதை அடுத்து பயிற்சியாளர் பதவியில் கிரிக்கெட் ஜாம்பவான் ராகுல் டிராவிட் அமர, முழுநேர டி20 கேப்டனாக அவதாரம் எடுத்துள்ளார் ரோகித் சர்மா.

ஆசிய கோப்பை, ஐபிஎல் கோப்பைகள் போன்றவற்றை ரோகித் வென்றிருந்தாலும், தற்போது அவர் முன் இருக்கும் மிகப்பெரிய சவால், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தான்.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில், பாகிஸ்தான், நியூசிலாந்து இடையேயான தோல்விக்கு பேட்டிங் சொதப்பலும், பணிச்சுமையும் மிகப்பெரிய காரணங்கள் என கூறப்பட்டன.

குறிப்பாக பணிச்சுமையை கருத்தில் கொண்டு இனி வீரர்களுக்கு போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என திராவிட் கூறியுள்ளதால், 

இனிவரும் டி20 தொடர்களில் எதிர்பாராத சில மாற்றங்கள் இருக்கலாம் என பேசப்படுகிறது. ஸ்ரேயஸ் அய்யர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், மிடில் ஆர்டரில் மாற்றம் வர வாய்ப்பிருக்கலாம் என கூறப்படுகிறது.

பாண்டியா உடற்தகுதியை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், அவரது ஆல்ரவுண்டர் இடத்தில் வெங்கடேஷ் ஐயர் சரியாக இருப்பாரா எனவும் ஆலோசித்து வருகிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகம், ஸ்விங் பந்துவீச்சுக்கு சாதகமானவை என்பதால், முகமது சிராஜ்க்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி பல யோசனைகள் கூறப்பட்டாலும், இறுதி முடிவும், எதிர்கால திட்டமிடலும் ரோகித் சர்மா - ராகுல் திராவிட் கூட்டணியிடமே உள்ளது. நாக்பூரில் நடைபெறும் முதல் டி20 போட்டி மூலம் ரோகித் சர்மா - ராகுல் திராவிட் அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது...

இந்த கூட்டணி வரலாறு படைக்குமா? காத்திருப்போம்...


Next Story

மேலும் செய்திகள்