டி20 உலக கோப்பை - நியூ. அதிர்ச்சி தோல்வி - நியூசிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்

ஆஸ்திரேலியாவுடனான இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி தடுமாறிய போது, தனியொரு நபராக தனது அணியை தூக்கி நிறுத்திய நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சனை உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம் ?
டி20 உலக கோப்பை - நியூ. அதிர்ச்சி தோல்வி - நியூசிலாந்து அணிக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம்
x
தனது முதல் டி20 உலக கோப்பையை வென்ற கிரிக்கெட் உலகின் ஜாம்பவனான ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் அதே வேளையில். நியூசிலாந்து  அணியின் டி-20 உலக கோப்பை கனவு கலைந்தது, உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இறுதி போட்டியில் முதல் பத்து ஓவரில் நியூசிலாந்து அணி வெறும் 57 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கையை மாற்றி அமைத்தார், கேப்டன் வில்லியம்சன்.

இம்முறை மட்டுமல்ல ஒவ்வொரு முறையும், இறுதி நேரங்களில் தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் கேப்டனாக வில்லியம்சனின் பங்களிப்பு பெரிது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இறுதி போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசியவர் என்ற பெருமையும் தற்போது வில்லியம்சனுக்கு கிடைத்திருக்கிறது. அதிரடியாக விளையாடிய வில்லியம்சன், 32 பந்துகளில் அரைசதம், 48 பந்துகளில் 85 ரன்களை குவித்து அசத்தினார். இதனால் ஆட்டம் முடிந்தது என நினைத்த நியூசிலாந்து அணியால் ஆஸ்திரேலிய அணிக்கு 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

ஆனால் இறுதியாக ஆஸ்திரேலியாவின் டி20 உலக கோப்பை கனவே பலித்தது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு பிறகு நியூசிலாந்து அணி அடைந்த மிக பெரிய ஏமாற்றம் இதுவாகும். 2019ல் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் பவுண்டரிகளை கணக்கில் கொண்டு, அந்த அணி பட்டம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

ஆனால் இம்முறை, முதல் உலக டெஸ்ட் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஒரே ஆண்டில் இரண்டு ஐசிசி தொடர்களை வெல்லும் வாய்ப்பு கை நழுவி போயுள்ளது. இருப்பினும் தனது தலைச்சிறந்த ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது, நியூசிலாந்து அணி.

Next Story

மேலும் செய்திகள்