ஆப்கானின் வெற்றிக்காக வேண்டும் இந்தியா - நியூசிலாந்தை சாய்க்குமா ஆப்கானிஸ்தான்?
பதிவு : நவம்பர் 07, 2021, 10:04 AM
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற உள்ள நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியை, இந்திய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உற்றுநோக்குகின்றனர். ஏன், எதற்கு என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்....
தீபாவளிக்கு முன்னர் ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட இந்திய அணி,

இப்போது அதே அணியின் வெற்றிக்காக தவமாய் தவமிருந்து வருகிறது...

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இரண்டாவது குரூப்பில் 4 வெற்றிகளுடன் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில்,

இரண்டாவது இடத்திற்கு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்திய அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன.

முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க, அப்போதே அரையிறுதி வாய்ப்பு மங்கியது. 

இருப்பினும் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை அடுத்தடுத்து புரட்டி போட்டதால், நெட் ரன்ரேட்டில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானை பின்னுக்கு தள்ளிவிட்டது இந்திய அணி.

இந்தியாவுக்கு ஒரு போட்டி மீதம் இருந்தாலும், அரையிறுதி வாய்ப்பு என்பது பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியை பொறுத்தே உள்ளது..

இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால், இந்தியாவின் வாய்ப்பு பறிபோகும்..

மாறாக ஆப்கானிஸ்தான் வென்றால், அந்த வெற்றியை பொறுத்து கடைசி போட்டியில் இந்தியாவிற்கு இலக்கு நிர்ணயமாகும்...

இதனால் ஆப்கானிஸ்தான் எப்படியாவது வெல்ல வேண்டும் என வேண்டுதலில் இறங்கிவிட்டனர் ரசிகர்கள்... வேண்டுதலோடு, ரசிகர்கள் உருவாக்கி வரும் மீம்ஸ்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.


ஆப்கான் ஸ்பின்னர் முஜிபூர் ரஹ்மானுக்கு ஏற்பட்ட காயத்தை குணப்படுத்த, மருத்துவரை வேண்டுமென்றாலும் தருகிறோம் என இந்திய வீரர் அஸ்வின் விளையாட்டாக பேசியதும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

நடப்பு தொடரில் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தை சாய்க்குமா? அற்புதம் நிகழுமா? என மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கின்றனர், இந்திய ரசிகர்கள்...

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

183 views

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல் - இன்று மாலை 6 மணிக்கு வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் 4ஆவது பாடல் இன்று வெளியாக உள்ளது.

102 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

71 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

61 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

36 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

30 views

பிற செய்திகள்

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

4 views

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.

7 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

49 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.