உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடர் - மகளிர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை சாம்பியன்
ஜப்பானில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில் அந்நாட்டு வீராங்கனை மய் முரகாமி தங்கப் பதக்கம் வென்றார்.
ஜப்பானில் நடைபெற்ற உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில் அந்நாட்டு வீராங்கனை மய் முரகாமி தங்கப் பதக்கம் வென்றார். ஃப்ளோர் (floor) பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில், பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி, பார்வையாளர்களை முரகாமி பிரமிக்க வைத்தார். தங்கப் பதக்கம் வென்ற பிறகு, மிகவும் உணர்ச்சிகரமாக முரகாமி காணப்பட்டார். மேலும், ஆடவர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் யுலா தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
Next Story

