ஐபிஎல் - 2022 மேலும் புதிதாக 2 அணிகள் : சிஎஸ்கேவை மீண்டும் வழிநடத்துவாரா தோனி?

அடுத்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையை அணியை மீண்டும் தோனி வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு, அணி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் தோனி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
ஐபிஎல் - 2022 மேலும் புதிதாக 2 அணிகள் : சிஎஸ்கேவை மீண்டும் வழிநடத்துவாரா தோனி?
x
9 முறை இறுதிப்போட்டிக்கு தகுதி.... 4 முறை சாம்பியன் பட்டம் என ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அசைத்து பார்க்க முடியாத அணியாக வெற்றி நடை போடுகிறது.... சென்னை சூப்பர் கிங்ஸ்...

'தல' தோனி தலைமையில் கடந்த 14 ஆண்டுகளாக களம் கண்ட சென்னை அணிக்கு, அடுத்த ஆண்டும் தோனி தலைமை தாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது... 
காரணம்.... தற்போது தோனிக்கு 40 வயது... 
 

தமிழகத்தின் தத்துப்பிள்ளையான தோனியையும்,  சிஎஸ்கே அணியையும் பிரித்து பார்க்க முடியாது... 

இந்த நிலையில் தான், ஐபிஎல்லில் நீடிப்பீர்களா என அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்ற கையுடன் கேட்கப்பட்ட கேள்விக்கு... தான் அடுத்த ஆண்டும் சென்னை அணியிலேயே நீடிக்க உள்ளதாக சூசகமாக பதிலளித்துள்ளார், தோனி...

அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் புதிதாக இரண்டு அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், டிசம்பர் மாதம் வீரர்களின் ஏலம் நடைபெறவுள்ளது... 

ஏலத்திற்கான விதிமுறைகள் இன்னும் முழுமையாக தெரியவராத நிலையில், ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்கள் வரை தக்க வைக்க வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது...

ஆனால், தான் சிஎஸ்கே அணியில் விளையாடுவதை விட, அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அணிக்கு பங்களிக்க கூடிய வீரர்கள் இடம்பெறுவது முக்கியம் என்றும், எந்த வகையிலும் அணி நிர்வாகம் பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார், தோனி... 

இதனால் அடுத்த முறை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி களமிறங்குவாரா அல்லது ஆலோசகராக அணியை வழிநடத்துவாரா என்பது தெரியவில்லை... ஆனால் நிச்சயம் சிஎஸ்கே அணியில் தோனி இடம்பெறுவார் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்கள் மத்தியில் நீடிக்கிறது.

இந்நிலையில், ஏலத்தின் போது முதல் வீரராக சென்னை அணியில் தோனி தக்க வைக்கப்படுவார் என சென்னை அணி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

எது எப்படியோ... தங்களுக்கு தங்கள் கேப்டன் முக்கியம் என்று சென்னை அணி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டிருப்பது, சிஎஸ்கே ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்