9வது முறையாக ஐபிஎல் பைனலில்... சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்த
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி 9வது முறையாக சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக முறை இறுதிப்போட்டியில் பங்கேற்ற அணியாக இருந்தாலும்,
அடுத்தடுத்து 3 தோல்வி என்ற சறுக்கலுடன் QUALIFIER போட்டியில் களம் கண்டது சென்னை சூப்பர் கிங்ஸ்...
டாஸ் சென்னைக்கு சாதகமாக அமைய, பவுலிங்கை தேர்வு செய்தார் தோனி...
சில ஓவர்கள் நன்றாக வீசப்பட்டாலும், டெல்லி அணி வீரர்கள் நன்றாக செயல்பட்டதால், அந்த அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது.
இப்போது, சென்னை ரசிகர்களின் பார்வை ஓப்பனர்கள் மீது...
எப்படியாவது கரை சேர்த்துவிடுவார்கள் என நம்பிக்கொண்டிருக்க, முதல் ஓவரிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார் டூபிளசிஸ்.
ஆனால் அதற்கு பிறகு தான் விருந்து காத்திருந்தது ரசிகர்களுக்கு... தொடரில் கிடைத்த 2 போட்டிகளிலும் பெரிதாக சோபிக்காத உத்தப்பா, போட்டியின் கதாநாயகனானார்.
அட்டகாசமான ஷாட்களால் ரசிகர்களை கவர, மறுபக்கம் நங்கூரம் பாய்ச்சினார் ருத்துராஜ்..
இருப்பினும் 13வது ஓவரில் சிஎஸ்கே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆட்டம் விறுவிறுப்பானது
2 ஓவருக்கு 24 ரன்கள் தேவை. 19வது ஓவரில் முதல் பந்தில் கெய்க்வாட் ஆட்டமிழப்பு...
பார்மில் உள்ள ஜடேஜா அடுத்து உள்ளே வருவார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ரசிகர்கள் கரகோஷத்துடன் என்ட்ரீ கொடுத்தார் தோனி...
19 ஓவரில் ஒரு சிக்சர், 20 ஓவரில் அடுத்தடுத்து 3 பவுண்டரிகள் விளாசி மேட்சை முடித்து, சிஎஸ்கேவை 9வது பைனலுக்கு அழைத்து சென்றார்.
இதோடு, மந்தமாக விளையாடுகிறார் என விமர்சித்தவர்களுக்கு, நான் யார்? எனது வரலாறு என்ன? என்பதை மீண்டும் ஒருமுறை காட்சிப்படுத்தினார் தோனி.
அவ்வளவுதான் KING IS BACK என விராட் கோலி தொடங்கி, பல கோடி ரசிகர்கள் 'தல'யை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.
2020ல் சிஎஸ்கே கடைசி போட்டியை முடித்த பின்னர் நாங்கள் பலமான அணியாக திரும்புவோம் என்றார்..
இப்போது, 2021ல் கடைசி போட்டிக்கு அணியை வழிநடத்தி வந்துவிட்டார்...
இதுதான் தோனி... இதுதான் சிஎஸ்கே என புகழ்ந்து வருகின்றனர் ரசிகர்கள்...
Next Story

