காதலை தெரிவித்த தீபக் சாஹர் - காதலை ஏற்று ஆரத்தழுவிய காதலி

அபுதாபி மைதானத்தில் தனது காதலிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் தீபக் சாஹர் காதலை தெரிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதலை தெரிவித்த தீபக் சாஹர் - காதலை ஏற்று ஆரத்தழுவிய காதலி
x
நேற்றைய சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பிறகு தீபக் சாஹர் தனது காதலி ஜெயா பரத்வாஜ் முன் முழங்காலிட்டு காதலை தெரிவித்தார்... இதனையடுத்து அவரது காதலை ஏற்ற ஜெயா பரத்வாஜ், தீபக் சாஹரை ஆரத்தழுவிக் கொண்டார். போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற நிலையில் தீபக் சாஹர் 48 ரன்களை வாரி வழங்கினார். இந்நிலையில் போட்டியில் தோல்வியடைந்தாலும் காதலை கெட்டியாக பிடித்துக் கொண்ட தீபக் சாஹருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்