கொல்கத்தாவுக்கு எதிரான டி20... கடைசி பந்தில் சென்னை திரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. 

அபுதாபியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்த‌து. அந்த அணியில் அதிகபட்சமாக திரிபாதி 45 ரன்களும், நித்தீஷ் ராணா 37 ரன்களும் எடுத்தனர். 172 ரன்கள் இலக்குடன் தொடர்ந்து ஆடிய சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்த‌ நிலையில், கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக டூ பிளசிஸ் 43 ரன்களும், ருதுராஜ் 40 ரன்களும் சேர்த்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஜடேஜா 8 பந்துகளில் 2 புவுண்டரி, 2 சிக்சர்கள் உள்பட 22 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது.


Next Story

மேலும் செய்திகள்