சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?
பதிவு : செப்டம்பர் 23, 2021, 12:16 PM
துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன் பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா, தான் ஹெல்மெட் அணிவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், அவரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு போட்டியில் களம் இறங்க உள்ள வீர‌ர்களின் விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது பிசிசிஐ விதிகளின் படி தவறு என்றும், இதன் மூலம் சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல் கொடுத்து இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்த‌து. இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவு, தீபக் ஹூடாவை கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - கலப்பு இரட்டையர் காலிறுதி ஆட்டம்

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்-மனிகா பத்ரா ஜோடி, தோல்வியைத் தழுவியது.

4 views

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் - காலிறுதிக்கு இந்தியா தகுதி

ஜூனியர் உலகக் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடரின் காலிறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.

3 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் - இந்திய அணி 345 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.

13 views

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் - இந்திய வீரர் சத்யன் 3ம் சுற்றுக்கு முன்னேற்றம்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 3ம் சுற்றுக்கு இந்திய வீரர் சத்யன் முன்னேறி உள்ளார்.

5 views

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு பி.வி. சிந்து முன்னேற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.

9 views

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் - காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சிந்து முன்னேற்றம்

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.