சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?
பதிவு : செப்டம்பர் 23, 2021, 12:16 PM
துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஐ.பி.எல் தொடரில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன் பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா, தான் ஹெல்மெட் அணிவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில், அவரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஒரு போட்டியில் களம் இறங்க உள்ள வீர‌ர்களின் விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது பிசிசிஐ விதிகளின் படி தவறு என்றும், இதன் மூலம் சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல் கொடுத்து இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்த‌து. இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சூதாட்ட தடுப்பு பிரிவு, தீபக் ஹூடாவை கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடர் - 2-ம் சுற்றுக்கு சிலிச், கச்சனோவ் முன்னேற்றம்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஏடிபி டென்னிஸ் தொடரின் 2-ம் சுற்றுக்கு, முன்னணி வீரர்கள் மரின் சிலிச், கச்சனோவ் ஆகியோர் முன்னேறி உள்ளனர்.

6 views

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - சூப்பர்-12 சுற்றில் ஸ்காட்லாந்தை சாய்த்த நமீபியா

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 (twelve) சுற்று ஆட்டத்தில், ஸ்காட்லாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, நமீபியா வெற்றி பெற்றது.

7 views

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி : தடுப்பூசி செலுத்தாத வீரர்களுக்கும் அனுமதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விளையாட்டு வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7 views

முழங்காலிட மறுத்த குயின்டன் டி-காக்: "அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்"

டி.காக் சர்ச்சை தொடர்பாக அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறி உள்ளது.

12 views

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.

5 views

ஐ.பி.எல் தொடர்; மேலும் 2 புதிய அணிகள் - ஐ.பி.எல் அணிகள் எண்ணிக்கை 10-ஆக உயர்வு

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளதாக பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.