டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...
பதிவு : செப்டம்பர் 17, 2021, 02:13 PM
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக்கோப்பைகளை வென்று தந்த எம்.எஸ். தோனி, திடீர் அறிவிப்பாக கேப்டன்சியை ராஜினாமா செய்து ஷாக் கொடுத்தார். தற்போது இதனை நினைவு கூற வைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி...கடந்த 6 ஆண்டுகளாக மூன்று வடிவிலான போட்டியிலும் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருவதால், பணிச்சுமையை கருதி வருகிற உலகக்கோப்பைக்கு பிறகு டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்பது தான் அந்த அறிவிப்பு.கேப்டன்சி கேரியரில் உச்சத்தில் இருக்கும் கோலி, திடீரென டி20 கேப்டன்சியை விட்டுக்கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.டி20 பொறுத்தவரை இதுவரை 45 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார். கேப்டனாக அவர் சந்திக்கும் முதல் மற்றும் கடைசி டி20 உலகக்கோபை வருகிற தொடர் தான்.
கேப்டனாக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 ஐசிசி தொடர்களை சந்தித்த கோலி, இரண்டு பைனல், ஒரு அரையிறுதி வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
மறுபக்கம் ரன் மெஷின் என கொண்டாடப்பட்டு வரும் காலக்கட்டத்தில், 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள சில பின்னடைவு,ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரோகித்தின் ஆளுமை என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பேசப்படுகிறது..எது எப்படி இருந்தாலும், கேப்டன்ஷியை துறந்த பிறகு சச்சின் தெண்டுல்கர் எப்படி முழுக்க முழுக்க பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினாரோ, அதேபோல கோலியும், அனைத்துவிதமான போட்டிகளிலும் வழக்கமான பாணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு...


தொடர்புடைய செய்திகள்

(08.01.2022) ஏழரை

(08.01.2022) ஏழரை

53 views

(15.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு அம்பேத்கர் பேரன் மாவோயிஸ்ட் என்பதால் சுடப்பட்டாரா? சென்னை வெள்ள தடுப்புக்கு மோடிக்கு நெருக்கமானவாரா?

(15.11.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு அம்பேத்கர் பேரன் மாவோயிஸ்ட் என்பதால் சுடப்பட்டாரா? சென்னை வெள்ள தடுப்புக்கு மோடிக்கு நெருக்கமானவாரா?

44 views

(24.11.2021) ஏழரை

(24.11.2021) ஏழரை

34 views

(12.11.2021) ஏழரை

(12.11.2021) ஏழரை

30 views

(10-12-2021) ஏழரை

(10-12-2021) ஏழரை

26 views

(29.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - கிரிக்கெட் விளையாட்டில் பாக் வென்றால் பாராட்ட கூடாதா? தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? உ.பி விபரீதம்!

(29.10.2021) மெய்ப்பொருள் காண்பது அறிவு - கிரிக்கெட் விளையாட்டில் பாக் வென்றால் பாராட்ட கூடாதா? தேசிய பாதுகாப்பு சட்டம் பாயுமா? உ.பி விபரீதம்!

24 views

பிற செய்திகள்

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

PRIME TIME NEWS | தமிழக சிறுமிக்கு விருது முதல்..ஸ்மிருதி மந்தனா சிறந்த வீராங்கனை வரை..இன்று(24-01-22)

14 views

"வேண்டாம்... அப்படி பண்ணாதீங்க..." - கோலி - அனுஷ்கா தம்பதியின் கோரிக்கை

தங்களது குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம் என விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

11 views

போராடி தோல்வியடைந்த இந்தியா - கண் கலங்கிய தீபக் சஹார்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கு, ஆல்-ரவுண்டர் தீபக் சஹார் கண் கலங்கினார்.

9 views

ஃபரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங்" உலகக் கோப்பை போட்டி..உறைபனியில் ஸ்கேட்டிங் செய்து உற்சாகம்

ஸ்வீடனில் நடைபெற்ற ஃப்ரீ-ஸ்டைல் ஐஸ் ஸ்கேட்டிங் உலகக் கோப்பை தொடரில் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர்.

7 views

இன்னும் 7 மாதத்தில் உலக கோப்பை - தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில், தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர் பரத் கூறுவதை தற்போது பார்க்கலாம்....

5 views

மைதானத்தில் எறியப்பட்ட பொம்மைகள்..திடீரென பொழிந்த 'டெடி பியர்' மழை

விளையாட்டு மைதானத்தில் ரசிகர்கள் பொம்மைகளை எறியும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.