டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...
பதிவு : செப்டம்பர் 17, 2021, 02:13 PM
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக்கோப்பைகளை வென்று தந்த எம்.எஸ். தோனி, திடீர் அறிவிப்பாக கேப்டன்சியை ராஜினாமா செய்து ஷாக் கொடுத்தார். தற்போது இதனை நினைவு கூற வைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி...கடந்த 6 ஆண்டுகளாக மூன்று வடிவிலான போட்டியிலும் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருவதால், பணிச்சுமையை கருதி வருகிற உலகக்கோப்பைக்கு பிறகு டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்பது தான் அந்த அறிவிப்பு.கேப்டன்சி கேரியரில் உச்சத்தில் இருக்கும் கோலி, திடீரென டி20 கேப்டன்சியை விட்டுக்கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.டி20 பொறுத்தவரை இதுவரை 45 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார். கேப்டனாக அவர் சந்திக்கும் முதல் மற்றும் கடைசி டி20 உலகக்கோபை வருகிற தொடர் தான்.
கேப்டனாக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 ஐசிசி தொடர்களை சந்தித்த கோலி, இரண்டு பைனல், ஒரு அரையிறுதி வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
மறுபக்கம் ரன் மெஷின் என கொண்டாடப்பட்டு வரும் காலக்கட்டத்தில், 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள சில பின்னடைவு,ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரோகித்தின் ஆளுமை என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பேசப்படுகிறது..எது எப்படி இருந்தாலும், கேப்டன்ஷியை துறந்த பிறகு சச்சின் தெண்டுல்கர் எப்படி முழுக்க முழுக்க பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினாரோ, அதேபோல கோலியும், அனைத்துவிதமான போட்டிகளிலும் வழக்கமான பாணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு...


தொடர்புடைய செய்திகள்

(21/09/2021) திரை கடல் : சாதனை பெண்ணிடம் ஆலோசனை கேட்ட அஜித்

(21/09/2021) திரை கடல் : சாதனை பெண்ணிடம் ஆலோசனை கேட்ட அஜித்

29 views

நடிகர் சிம்புவின் மாநாடு திரைப்படம் - ஒற்றுமையின் குரல் பாடல் வெளியீடு

மாநாடு திரைப்படத்தின் ஒற்றுமையின் குரல் பாடல் வெளியாகி உள்ளது.

24 views

(24.11.2021) ஏழரை

(24.11.2021) ஏழரை

24 views

(12.11.2021) ஏழரை

(12.11.2021) ஏழரை

23 views

லக்னோவில் டிஜிபி-கள் மாநாடு - மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

2021ம் ஆண்டுக்கான டிஜிபி-க்கள் மாநாடு லக்னோவில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

22 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01/12/2021) | Headlines | Thanthi TV

6 views

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 83 படத்தின் டிரெய்லர்

83 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

198 views

கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி சாதனை- 7வது முறையாக சிறந்த வீரருக்கான விருது

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

102 views

ஐபிஎல் : எந்த அணி யாரை தக்கவைக்கும்..?

ஐபிஎல் தொடரில் வீரர்கள் தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. எந்தெந்த அணி, எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும்?

10 views

இது 7வது விருது... மெஸ்ஸியின் புதிய சாதனை

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

13 views

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்பு - இன்று அறிவிப்பு

ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.