"டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்"

டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.
டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்
x
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட், ஒருநாள் அணிகளை வழி நடத்துவதில் முழு கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 9 வருடங்களாக 3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருவதோடு, 6 வருடங்களாக கேப்டனாக உள்ள நிலையில், அதன் பணிச்சுமையினை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கோலி தெரிவித்துள்ளார். ரவி சாஸ்திரி, ரோஹித் சர்மாவிடம் விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ள கோலி, பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா, தேர்வாளர்கள் ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணிக்காக தொடர்ந்து தமது திறமையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ள விராட் கோலி, டி20 தொடர்களில் கேப்டனாக, சிறப்பாக செயல்பட உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்