பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு
x
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் - முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ராஜா தேர்வு 

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மென் ரமீஷ் ஹாசன் ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ரமீஷ் ராஜாவை இந்த பதவிக்கு முன்மொழிந்த பின், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2004 வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ரமீஷ் ராஜா பணியாற்றிய போது, பல முக்கிய சீர்திருத்தங்களை முன்னெடுத்திருந்தார். ஆகஸ்ட் 27 முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்களையும், கிரிக்கெட் வாரிய அதிகாரிகளையும் சந்தித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். அடுத்து நடைபெற உள்ள டி-20உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணிக்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுப்பட்டார். டி-20 அணியின் உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட பின், தலைமை பயிற்சியாளர் மிஷாபுல் ஹக் (Misbah-ul-Haq) மற்றும் பந்து வீச்சுக்கான பயிற்சியாளர் வாக்கர் யுனிஸ் (Waqar Younis) ஆகிய இருவரும் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்