அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: மகுடம் சூடினார் டேனில் மெத்வதேவ் - அவரின் வெற்றிப் பயணம்...
பதிவு : செப்டம்பர் 13, 2021, 02:06 PM
அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை முதல் முறையாக முத்தமிட்டுள்ளார் ரஷ்ய வீரர் மெத்வதேவ்... அவரின் வெற்றிப் பயணத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...
டேனில் மெத்வதேவ்....

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீரர்...
13 ஏ.டி.பி. (ATP) டென்னிஸ் தொடர்களை வென்றவர்...
சர்வதேச டென்னிஸ் அரங்கில் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க நபராக பரிணமித்தவர்...

இவ்வாறு பல்வேறு சிறப்புகளை ரஷ்ய வீரர் மெத்வதேவ் பெற்றிருந்தாலும், கிராண்ட்ஸ்லாம் பட்டம் மட்டும் அவருக்கு எட்டாக்கனியாகவே நீடித்தது.

2019-ஆம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், நடப்பாண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபனிலும் இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் மெத்வதேவ்...

ஆஸ்திரேலிய ஓபன் தோல்விக்குப் பிறகு பெரிதாக பிரகாசிக்கத் தவறிய மெத்வதேவ், ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபனில் களம் கண்டார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் நான்கு சுற்றுகளிலும், எதிர்த்து ஆடிய வீரர்களிடம் ஒரு செட்டை கூட இழக்காமல் அதிரடி காட்டினார் மெத்வதேவ்...

(1-4 TH ROUND மெத்வதேவ் ஆடியது, ஸ்மால் ப்ரீத்)

தொடர் வெற்றிகளால் காலிறுதியில் கால்பதித்து, அரையிறுதிக்குள்ளும் அட்டகாசமாக நுழைந்த மெத்வதேவ்,

அரையிறுதியில் கனடாவின் இளம் வீரர் ஃபெலிக்சை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார்.

இறுதிப் போட்டியில், எதிர்பார்த்ததுபோல் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் வந்து நிற்க, இந்த முறையும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் மெத்வதேவிற்கு தோல்வி என்றே ரசிகர்கள் எண்ணினார்கள்.

ஏனெனில், 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாறு படைக்கும் முனைப்புடன் மறுமுனையில் காத்திருந்தார் ஜோகோவிச்...

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இறுதிப் போட்டியில் முதல் செட்டை 6-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் மெத்வதேவ் வெல்ல, வழக்கமான பாணியில் ஜோகோவிச் முதல் செட்டை விட்டுள்ளார் என்றே கருதப்பட்டது.

இருப்பினும் 2-வது செட்டையும் 6-க்கு 4 என்று கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அழுத்தம் கொடுத்தார் மெத்வதேவ்...

தொடர்ந்து 3-வது செட்டையும் அதே புள்ளிக் கணக்கில் கைப்பற்றிய மெத்வதேவ், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரி திறக்க தடை - மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்கும் அரசின் உத்தரவை நிறுத்தி வைத்து, அந்த மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும், பள்ளிக் கல்லூரிகளின் நேரடி வகுப்புகள் முடங்கின.

68 views

"கடும் கட்டுப்பாடுகள் வேண்டாம்"- தலிபான்களுக்கு மாணவர்கள் வேண்டுகோள்

தலிபான்களுக்கு ஆட்சிக்குக் கீழ் தங்கள் கல்வியைத் தொடரத் தயாராக இருப்பதாக ஆப்கான் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

43 views

தொடர்ந்து பெய்து வரும் மழை: முழு கொள்ளளவை எட்டுகிறது கே.ஆர்.பி அணை

தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கேஆர்பி அணை வேகமாக நிரம்பி வருவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

19 views

புதுச்சேரி வரும் துணைக் குடியரசுத் தலைவர்: செப். 12 ஆம் தேதி புதுச்சேரி வருகிறார்

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரசு முறை பயணமாக துணைக் குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தருகிறார்.

17 views

பிற செய்திகள்

சிறுநீர் நுரைத்து வெளியேறினால்? - "உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்"

சமீபகாலமாக சிறுநீர் நுரைத்து வெளியேறும் பிரச்சினை பொதுமக்களுக்கு அதிகரித்துள்ள நிலையில், சிறுநீர் நுரைத்து வெளியேறுவதற்கான காரணம் என்ன...?.. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.....

1 views

நீட் விவகாரம் - "மாணவர்களை திமுக குழப்பியது" - எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் தனுஷ் குறித்து பேச அனுமதி தரப்படாததால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

8 views

"போட்டித்தேர்வு - தமிழ் மொழி கட்டாயம்"

"தமிழக அரசின் அனைத்து போட்டித்தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதி தேர்வாக கட்டாயமாக்கப்படும்" - மனிதவள மேலாண்மை துறை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு

6 views

உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு

உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

7 views

நீட் தேர்வு: வினாத்தாள் எப்படி இருந்தது? - மாணவர்கள் கருத்து

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள் இடம் பெற்றிருந்ததாக தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

28 views

ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் - தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.