அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மெட்வதேவ் சாம்பியன்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை, ரஷ்ய வீரர் டேனில் மெட்வதேவ் வென்றுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் - மெட்வதேவ் சாம்பியன்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தினார்
x
இதன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மெட்வதேவ், செர்பிய வீரர் ஜோகோவிச்சை  எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெட்வதேவ், ஜோகோவிச்சை 3க்கு 0 என்ற செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி பட்டம் வென்றார். இதுவரை மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மெட்வதேவ், இந்த வெற்றியின் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்