இந்திய அணியின் நம்பிக்கை பும்ரா - டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.
இந்திய அணியின் நம்பிக்கை பும்ரா - டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்
x
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.  இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் 5ம் நாள் ஆட்டம்..

பிட்ச் முழுவதும் பேட்டிங்கிற்கு சாதகம்... ரிவர்ஸ் ஸ்விங் மட்டுமே இந்திய அணியின் நம்பிக்கை..

போட்டி முக்கிய கட்டத்தை எட்டியது. இந்தியா வெல்ல அடுத்தடுத்து விக்கெட்டுகள் தேவை. இங்கிலாந்திற்கு ரன்கள் தேவை... இரண்டும் இல்லாவிட்டால் டிரா நிச்சயம் என்ற சூழல்...

இந்த சமயத்தில் பந்தை என்னிடம் கொடுங்கள்... என கேப்டன் கோலியிடம் கேட்டு வாங்கி பந்துவீசினார் ஜஸ்ப்ரீட் பும்ரா..

உணவு இடைவேளைக்கு பிறகு அவர் வீசிய ஒரு SPELL, டெஸ்ட் வரலாற்றில் மறக்க முடியாதவைகளில் ஒன்று

6 ஓவர்கள் வீசினார்... முதல் இன்னிங்ஸில் அதிக ரன்களை குவித்த POPE-ஐ க்ளீன் போல்டாக்கினார்.

அடுத்த சில நிமிடங்களில் பேர்ஸ்டோவின் கால் பாதத்தை பதம் பார்ப்பது போன்று யார்க்கர் வீசி, பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்... 

இந்திய பந்துவீச்சின் நம்பிக்கை பும்ரா என ரசிகர்கள் சிலாகிப்பதற்கு, இந்த ஒரு ஸ்பெல் உதாரணம் என கூறும் அளவிற்கு இருந்தது.

இதுஒருபக்கம் என்றால் போப் விக்கெட்டை சாய்த்த போது, புதிய சாதனை படைத்தார்... டெஸ்ட்டில் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமை..

கபில்தேவ் 25 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியதே இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக இருந்து வந்த நிலையில், பும்ரா 24வது போட்டியில் சாதனையை முறியடித்தார்.. இவர்களுக்கு அடுத்தபடியாக பதான், முகமது ஷமி, ஸ்ரீநாத் உள்ளனர்



Next Story

மேலும் செய்திகள்