அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு பிரிட்டன் வீராங்கனை எம்மா தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி ஆட்டத்துக்கு பிரிட்டனை சேர்ந்த இளம் வீராங்கனை எம்மா ரடுக்கானு முன்னேறி உள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: காலிறுதிக்கு பிரிட்டன் வீராங்கனை எம்மா தகுதி
x
மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று ஆட்டத்தில், 18 வயதே ஆன பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுக்கானுவும், அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஷும் பலப்பரீட்சை நடத்தினர். இதில் 6-க்கு 2, 6-க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற எம்மா ரடுக்கானு, காலிறுதிக்கும் முன்னேறினார். கனடாவை சேர்ந்த 19 வயது வீராங்கனை ஆனி ஃபெர்னான்டஸ் காலிறுதிக்கு முன்னேறி உள்ள நிலையில், தற்போது பிரிட்டனின்18 வயது வீராங்கனை எம்மா ரடுக்கானுவும் காலிறுதிக்கு தகுதி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்