அமெரிக்க ஓபன் - ஜோகோவிச் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்க ஓபன் - ஜோகோவிச் வெற்றி
x
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது சுற்றில் ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்ட ஜோகோவிச், முதல் 2 செட்களை கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய நிஷிகோரி, அடுத்த 2 செட்களை கைப்பற்ற போட்டி விறுவிறுப்பானது. இருப்பினும் கடைசி செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், இறுதியாக 7க்கு 6, 6க்கு 3, 6க்கு 7, 2க்கு 6, 6க்கு 3 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் - ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3-ம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டியும், அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸும் மோதினர். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை ஷெல்பி கைப்பற்ற, 2-வது செட்டை பார்டி வென்றார். தொடர்ந்து டைபிரேக்கர் வரை சென்ற 3-வது செட்டை 7-க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் வென்ற ஷெல்பி 4-ம் சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்