பாராலிம்பிக்கில் பறிபோன வெண்கலம் - வட்டெறிதல் வீரர் வினோத் குமாருக்கு ஏமாற்றம்

பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
பாராலிம்பிக்கில் பறிபோன வெண்கலம் - வட்டெறிதல் வீரர் வினோத் குமாருக்கு ஏமாற்றம்
x
பாராலிம்பிக் வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வென்ற வெண்கல பதக்கம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 41 வயதான வினோத் குமார் பங்கேற்றிருந்தார்.F-52 பிரிவில் கலந்துக்கொண்ட வினோத் குமார், அதிகபட்சமாக 5வது முயற்சியில் 19 புள்ளி ஒன்பது ஒன்று மீட்டர் தூரம் வீசி மூன்றாம் இடம் பிடித்தார். வெண்கலம் வென்றுவிட்டார் என அறிவிப்புகள் வெளியான நிலையில், போட்டி முடிந்த சில நிமிடங்களில் முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.வினோத் இந்த போட்டியில் பங்கேற்க தகுதி இல்லை எனக்கூறி சில அணிகள் முறையிட்டதால் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டன.






Next Story

மேலும் செய்திகள்