சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ரூப்லெவ் முன்னேற்றம்

அமெரிக்காவில் நடந்துவரும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னணி வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ் முன்னேறி உள்ளார்.
சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - இறுதிப் போட்டிக்கு ரூப்லெவ் முன்னேற்றம்
x
அமெரிக்காவில் நடந்துவரும் சின்சினாட்டி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னணி வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ் முன்னேறி உள்ளார். ஆடவர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில், ரஷ்யாவின் ரூப்லேவ், தர வரிசையில் 2-ம் இடம் வகிக்கும் சக நாட்டு வீரர் டேனில் மெத்வதேவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-க்கு 2 என்ற கணக்கில் மெத்வதேவ் கைப்பற்றினார். 2-வது செட்டை 6-க்கு 3 என ரூப்லெவ் கைப்பற்ற ஆட்டம் பரபரப்பானது. தொடர்ந்து, 3-வது செட்டை 6-க்கு 3 என்ற கணக்கில் வென்ற ரூப்லெவ், மெத்வதேவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம், சின்சினாட்டி தொடரின் இறுதிப் போட்டிக்கும் ரூப்லெவ் முன்னேறினார்.


Next Story

மேலும் செய்திகள்