தடகளத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் - நீரஜ் சோப்ராவுக்கு குவியும் பாராட்டு
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.
ஆடவர் ஈட்டியெறிதல் தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, இன்று இறுதிப் போட்டியில் பங்கேற்றார். தன்னுடைய முதல் முயற்சியிலேயே 87 புள்ளி 03 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அசத்திய அவர், தனது இரண்டாவது முயற்சியில் 87 புள்ளி 58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். மற்ற நாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ரா வீசிய தூரத்தை நெருங்காத நிலையில், நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 13 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் கிடைந்து உள்ளது. ஒலிம்பிக் தடகள பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கம் இதுவாகும். சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவின் நீண்டகால தங்க பதக்க கனவை நீரஜ் சோப்ரா நனவாக்கி உள்ளார். தடகள பிரிவில் இந்தியா பெறும் முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 23 வயதான நீரஜ் சோப்ரா ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியை சேர்ந்தவர். ஒலிம்பிக் வரலாற்றில் இந்த முறை இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை வென்று உள்ளது.
Next Story

