டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - அரையிறுதியில் இந்தியா போராடி தோல்வி

பரபரப்பாக நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி அடைந்தது.
x
அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை அணியான, பலம் வாய்ந்த அர்ஜென்டினா மகளிர் அணியை,  இந்திய மகளிர் அணி எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலை வகித்தன. தொடர்ந்து நடந்த இரண்டாவது பாதியின் 36-வது நிமிடத்தில் கோல் அடித்து அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. இந்திய வீராங்கனைகள் பெனால்டி வாய்ப்புகளை வீணாக்கிய நிலையில், ஆட்ட நேர முடிவில் 2-க்கு 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா மகளிர் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம், அந்த அணி இறுதிப்போட்டிக்கும், முன்னேறி உள்ளது. தோல்வியைத் தழுவிய இந்திய மகளிர் அணி, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டனுடன் வருகிற 6-ம் தேதி விளையாட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்