இந்திய ஹாக்கி அணிகள் புதிய உச்சம் - ஒடிசா முதல்வருக்கு குவியும் வாழ்த்துக்கள்

ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டிருக்கும் நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக்கிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய ஹாக்கி அணிகள் புதிய உச்சம் - ஒடிசா முதல்வருக்கு குவியும் வாழ்த்துக்கள்
x
ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டிருக்கும் நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக்கிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.ஹாக்கி மைதானத்தில் எதிரணியின் வியூகத்தை உடைத்து, வலையை நோக்கிப் பாயும் பந்துகளை தடுத்து தனது அணியின் வெற்றிக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுப்பவர் கோல்கீப்பர்.தற்போது இந்திய ஹாக்கி அணிகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கோலோச்ச பெரும்பங்காக இருப்பவரும் முன்னாள் கோல்கீப்பர் தான். ஆம்... இந்திய ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் ஒடிசா முதல்வர் நவீன் பாட்நாயக் பள்ளி ஹாக்கி போட்டியில் கோல் கீப்பராக இருந்தவர். இந்தியாவுக்கு பல பாராட்டுகளையும், தியான் சந்த் போன்ற வரலாறு போற்றும் வீரர்களையும் கொடுத்த ஹாக்கி, மோசமான தருணத்தை எதிர்க்கொண்ட போது அதற்கு ஸ்பான்சர் செய்ய முன்வந்தார் நவின் பட்நாயக். இந்திய ஜூனியர் அணி உள்பட அனைத்து அணிகளுக்கும் ஸ்பான்சர் செய்கிறது ஒடிசா அரசு.ஒலிம்பிக்கில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அரையிறுதியில் ஆண்கள் அணி, முதல்முறையாக அரையிறுதியில் பெண்கள் அணி என்ற இந்த திருப்புமுனைக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது ஒடிசா அரசு.2018 ஆம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பையை ஒடிசா அரசு நடத்தியது. 150 கோடி ரூபாய் வரையில் ஒடிசா அரசு இந்திய ஹாக்கி அணிகளுக்கு ஸ்பான்சர் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணியின் வெற்றிகளுக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்த பட்நாயக், 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்திய ஹாக்கி அணிக்கு ஒடிசா ஆதரவளித்து வருவதால், ஒடிசா மக்கள் பெருமையடைகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். ஒலிம்பிக் மைதானத்தில் ஒடிசா பெயர் தாங்கிய ஜெர்சியுடன் விளையாடுவதை அம்மாநில மக்கள் கொண்டாடுகிறார்கள். விளையாட்டின் மீது அதீத காதல் கொண்ட பட்நாயக், ஹாக்கியை மீட்டெடுக்க செய்த பணி அளப்பரியது என அவரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டிருப்பதற்கான பாராட்டை பகிர்ந்துக்கொள்ளும் நவீன் பட்நாயக், களத்திற்கு வெளியே ஆட்டநாயகனாகவே ஜொலிக்கிறார். Next Story

மேலும் செய்திகள்