ஒலிம்பிக் ஹாக்கி போட்டி - காலிறுதி போட்டிக்கு நுழைந்த இந்தியா

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
x
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஏ பிரிவில் ஐந்தாம் இடத்தில் இருந்த அயர்லாந்து அணி, காலிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்காக கிரேட் பிரிட்டன் அணியுடன் மோதியது. இதில் கிரேட் பிரிட்டன் அணி 2-க்கு 0 என்ற கணக்கில் வென்றது. அயர்லாந்து தோல்வி பெற்றதால், இந்திய அணிக்கு காலிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ பிரிவில் 6 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்து இந்தியா, காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய மகளிர் அணி எதிர்கொள்கிறது.


Next Story

மேலும் செய்திகள்