டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - வெயிலின் தாக்கத்தால் தவித்த வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீரர்கள் கடும் அவதியடைந்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி - வெயிலின் தாக்கத்தால் தவித்த வீரர்கள்
x
டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வீரர்கள் கடும் அவதியடைந்தனர். குறிப்பாக உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவ், 3-வது சுற்று ஆட்டத்தில் வெப்பத்தை தாங்க முடியாமல் சோர்வடைந்தார். இதனால், அடிக்கடி அவர் களத்தில் இருந்து வெளியேறி, சில நிமிடங்கள் ஓய்வெடுத்த நிலையில், போட்டியின் நடுவர் மெத்வதேவிடம் ஆட்டத்தை தொடர முடியுமா என வினவினார். அப்போது, தன்னால் போட்டியை முடிக்க முடியுமென்றும், ஆனால், தான் இறந்தால், தங்களால் பொறுப்பேற்க முடியுமா என்றும் நடுவரிடம் மெத்வதேவ் கேள்வி எழுப்பினார். இதனால், நடுவர் சற்று அதிர்ச்சி அடைந்த நிலையில், தொடர்ந்து விளையாடிய மெத்வதேவ், போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


Next Story

மேலும் செய்திகள்