டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி - தமிழக வீரர் சரத் கமல் வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி, தமிழக வீரர் சரத் கமல் சாதனை படைத்து உள்ளார்.
டோக்கியோவில் இன்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில், போர்ச்சுகல் வீரர் அப்போலோனியாவும், சரத் கமலும் மோதினர். இதில் முதல் செட்டை போர்ச்சுகல் வீரர் வென்றார். அடுத்த 2 செட்களை சரத் கமல் கைப்பற்றினார். ஆட்டத்தின் நான்காவது செட் மீண்டும் போர்ச்சுகல் வீரர் வசம் சென்ற நிலையில், 11-க்கு 6, 11-க்கு 9 என்று அடுத்தடுத்து 2 செட்களை சரத் கமல் கைப்பற்றி போட்டியில் வென்றார். இதன்மூலம், ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில், மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சரத் கமல் படைத்து உள்ளார். 3-வது சுற்று ஆட்டத்தில், கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீரர் மா லாங்குடன், சரத் கமல் மோத உள்ளார்.
Next Story
