டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.  குரூப் ஏ பிரிவில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவிடம் இந்தியா மோதியது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பியல், கோல் அடித்து அந்த அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்திருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், டிஃபன்ஸ், அட்டாக் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டனர். இந்திய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகள் அனைத்தையும் வீணாக்கிய நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பெனால்டி வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தினர். இதனால், முதல் பாதி முடிவில் ஆஸ்திரேலியா 4-க்கு பூஜ்யம் என முன்னிலை பெற்றது. தொடர்ந்து, நடந்த 2-வது பாதியில் இந்திய வீரர் ருபிந்தர் பால் சிங், ஒரு கோல் அடித்தார். இருப்பினும், இரண்டாவது பாதியிலும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கமே தொடர்ந்தது. இதனால், ஆட்ட நேர முடிவில் 7-க்கு 1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. போட்டியில் படுதோல்வியடைந்த இந்தியா, 3-வது லீக் ஆட்டத்தில், ஸ்பெயினை சந்திக்க உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்