ஆடவர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார்.
x
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் 25 ஆண்டுகள் கழித்து இந்தியாவுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளார். 

முதல் சுற்று ஆட்டத்தில், உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினுடன், சுமித் நாகல் மோதினார். இதில், முதல் செட்டை 6-க்கு 4 என சுமித் நாகல் வெல்ல, 2-வது செட்டை இஸ்டோமின் வென்றார். வெற்றியை நிர்மாணிக்கும் 3-வது செட்டை 6-க்கு 4 என கைப்பற்றிய நாகல், 2-வது சுற்றுக்கும் முன்னேறினார். இதன்மூலம், 1996-ம் ஆண்டில் நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கிற்குப் பிறகு, ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்து உள்ளார். 2-வது சுற்று ஆட்டத்தில், உலகின் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவின் மெத்வதேவை, சுமித் நாகல் சந்திக்க உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்