8 மணி நேரம் காத்திருந்த இந்திய ஒலிம்பிக் வீரர்கள்

ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக, இந்தியாவில் இருந்து முதல் அணியாக பாய்மர படகு போட்டி வீரர்கள் டோக்கியோ சென்றுள்ளனர். அவர்களிடம்
8 மணி நேரம் காத்திருந்த இந்திய ஒலிம்பிக் வீரர்கள்
x
கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், வெற்றிகரமாக ஒலிம்பிக் தொடரை நடத்தி முடிக்க முனைப்பு காட்டி வருகிறது ஜப்பான் அரசு..கொரோனா பரவலின் நான்காவது அலையை எதிர்கொண்டுள்ள டோக்கியோவில், புதன்கிழமை மட்டும் 1,149 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதுஇதனால் ஜூலை 23ம் தேதி நடைபெறும் தொடக்க விழாவில் 10,000 பேர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது..இந்த சூழலில், ஒலிம்பிக்கில் பங்கேற்க செல்லும் வீரர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை அறிந்த இந்திய ஒலிம்பிக் சங்கம், கொரோனா கட்டுப்பாடுகள், விமானநிலையத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் குறித்து முன்கூட்டியே எச்சரித்திருந்தது.ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து முதல் அணியாக 6 பேர் கொண்ட பாய்மரகு படகு போட்டி அணியினர் செவ்வாயன்று டோக்கியோ சென்றடைந்தனர்இதில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன், விஷ்ணு சரவணன், வருண், கணபதி ஆகியோர் அடங்குவர்...எதிர்பார்த்தப்படியே விமான நிலையத்தில் கடுமையான பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்..


Next Story

மேலும் செய்திகள்