சச்சின், தோனி வரிசையில் சவுரவ் கங்குலி - படமாகிறது கங்குலியின் கிரிக்கெட் பயணம்
பதிவு : ஜூலை 14, 2021, 05:07 PM
தனது கிரிக்கெட் பயணத்தை திரைப்படமாக இயக்க பிசிசிஐ தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
நாட்வெஸ்ட் தொடர் இறுதிப்போட்டி முடிந்து 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த தொடரை நினைத்தாலே, இன்றுகூட அனைவருக்கும் நினைவுக்கு வருவது லார்ட்ஸ் பால்கனியும், அங்கு இந்திய கேப்டன் கங்குலி டீசர்ட்டை கழற்றி சுற்றியதும் தான். இந்த தருணத்தை நினைவுக்கூர்ந்து ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வர, அவர்களை மேலும் குஷிப்படுத்த வந்துள்ளது ஒரு அறிவிப்பு. இந்திய அணியின் கேப்டனானது முதல் பிசிசிஐ தலைவராக பதவி வகிப்பது வரை தனது கிரிக்கெட் பயணத்தை திரைப்படமாக எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் தாதா கங்குலி. 2002ல் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் வெற்றிநடைக்கு முட்டுக்கட்டை போட்டு சொந்த மண்ணில் தொடரை வென்றது.

இதைவிட மேலாக கங்குலி - கிரேக் சேப்பல் விவகாரம் சினிமாவிற்கு ஏற்ற ஒரு தரமான சம்பவம்... இதில் காதல் கிசுகிசுவும் அடங்கும். மசாலா படமாக இருந்தாலும், உணர்ச்சிமிகுந்த படமாக இருந்தாலும் அனைத்திற்கும் தீனி போடும் கங்குலியின் கிரிக்கெட் பயணம். தனது படத்தில் ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என விருப்பம் தெரிவித்துள்ளார் கங்குலி. அவரை தவிர வேறு இரு நடிகர்களை நடிக்க வைக்கலாம் எனவும் பேச்சு அடிபடுகிறது.

ஏற்கனவே கங்குலியின் நண்பரான சச்சினின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமாக வெளியானது.. இவர்களுக்கு அடுத்த தலைமுறை கேப்டனான எம்.எஸ். தோனியின் படம் இந்திய அளவில் மெஹாஹிட் ஆனது. இந்த வரிசையில் தற்போது கங்குலியும் தலையெடுக்க, மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது தாதாவின் ரசிகர்களுக்கு.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

'விக்ரம்' படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி இணைந்துள்ளார்.

67 views

சிம்புவின் மாநாடு பட டிரைலர் எப்போது? - சிம்பு பதிவிட்டுள்ள புகைப்படம்

சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.

36 views

ரஜினி, சிம்புவுடன் மோதும் அருண் விஜய் - தீபாவளிக்கு வெளியாகும் அருண் விஜய்யின் 'வா டீல்'

அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள "வா டீல்" திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 views

எஸ்.பி.பி : காற்றில் கரைந்த ஓராண்டு...அசாத்திய பாடல்கள் தந்த குரல் மன்னன்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், அவரது நினைவைப் போற்றும் ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..

26 views

எஸ்.பி.பி-யின் முதலாமாண்டு நினைவு தினம்: நினைவிடம் லிங்க வடிவில் பூக்களால் அலங்கரிப்பு

மறைந்த பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

46 views

"ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருகிறது" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு

ஓடிடி தளங்கள் இந்தியாவில் பிரபலமடைந்து வருவது சிறிய மாநில படங்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.