யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி - பிரிட்டன் அணி தோல்வி ரசிகர்கள் ஆத்திரம்
பதிவு : ஜூலை 13, 2021, 05:32 PM
யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோல் அடிக்க தவறிய பிரிட்டனின் கருப்பின வீரர்கள் மீது நடத்தப்பட்ட இனவெறி தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது...
லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இத்தாலி-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 1 க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால், போட்டியின் முடிவுக்காக கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அப்போதும் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.. இதனால் வெற்றியை நிர்ணயம் செய்ய ஆட்டம், பெனால்டி ஷூட்-அவுட் முறைக்கு சென்றது. பரபரப்பின் உச்சிக்கு சென்ற பெனால்டி ஷூட் ஆட்டத்தில் இத்தாலி அணி 3-2 என்ற கோல் கணக்கில் பிரிட்டனை வீழ்த்தி 53 ஆண்டுகளுக்கு பின்னர் கோப்பையை கைப்பற்றியது. முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்த பிரிட்டன் அணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டது.

பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரிட்டனின் மார்கஸ் ராஷ்போர்ட், ஜெடோன் சான்சோ, புகாயோ சாகா ஆகியோர் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது, அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. மூவரும் கருப்பின வீரர்கள் ஆவர். இந்நிலையில், தோல்வியால் விரக்தியடைந்த பிரிட்டன் ரசிகர்கள், இத்தாலியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களையும், தடுத்த போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார்,  49 ரசிகர்களை கைது செய்தனர். மோதல்களை தடுக்க முயன்ற 19 போலீசார் காயம் அடைந்தனர். மூன்று கருப்பு இன வீரர்களையும் பிரிட்டன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அநாகரிகமாக இனவெறி கருத்துகளால் திட்டி தீர்த்தனர். இது பெரும் சர்ச்சையான நிலையில், பிரிட்டன் ரசிகர்களின் இந்த இழிவான செயலுக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், இளவரசர் வில்லியம்ஸ், இங்கிலாந்து கால்பந்து சங்கம் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் அணி பாராட்டுக்கு தகுதி படைத்தது எனக் கூறியிருக்கும் போரிஸ் ஜான்சன்,  சமூக வலைதளங்களில் வீரர்கள் குறித்து இனவெறியுடன் விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியிருக்கிறார். அந்நாட்டு போலீசாரும் இனவெறி தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, பிரிட்டன் அணியில் கோல் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதும் தேம்பி, தேம்பி அழுத சாகாவை, கேப்டன் ஹாரிகேன் ஆரத்தழுவி ஆறுதல்படுத்தும் காட்சிகளை பதிவிட்டு பலரும் இனவெறி ரசிகர்களுக்கு பதிலடியை கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

ஆஸி. சாதனை - முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.

5 views

கொல்கத்தாவுக்கு எதிரான டி20... கடைசி பந்தில் சென்னை திரில் வெற்றி!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.

18 views

14 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய வரலாறு - மீண்டும் 'தல' தோனி ரீஎன்ட்ரி

இதே நாளில்... 14 ஆண்டுகளுக்கு முன்பு டி20 உலக கோப்பையை வென்று, ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தது, தோனி தலைமையிலான இளம்படை...

279 views

அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து வீரர்கள்: மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய ரொனால்டோ

சர்வதேச அளவில் அதிக வருமானம் பெறும் வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பெற்றுள்ளார். இதன் விவரத்தை தற்போது பார்க்கலாம்

13 views

சூதாட்ட தரகர்களுக்கு தீபக் ஹூடா சிக்னல்..?

துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு முன், பஞ்சாப் அணி வீர‌ர் தீபக் ஹூடா வெளியிட்ட புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

36 views

ஐ.பி.எல். 33-வது லீக் ஆட்டம் - டெல்லி அணி அபார வெற்றி

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.