யூரோ கால்பந்து சாம்பியன் இத்தாலி - இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது.
யூரோ கால்பந்து சாம்பியன் இத்தாலி - இங்கிலாந்து அணியை வீழ்த்தியது இத்தாலி
x
யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் லண்டனில் நடைபெற்றது. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்தில் இங்கிலாந்து வீர‌ர் லூக் ஷா(Luke Shaw) கோல் அடித்து அசத்தினார். இறுதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த‌தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இரு அணிகளும் சம பலத்துடன் ஆடியதால், ஆட்டம் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. முடிவில், இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சம நிலையில் இருந்த‌ன. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் மூன்றுக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வென்றது. இதன் மூலம், இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சுமார் 55 ஆண்டுகளுக்கு பின் இறுதி போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி, வெற்றி பெறாத‌து அந்நாட்டு ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்