யூரோ கோப்பை கால்பந்து தொடர் - போர்ச்சுகல், பிரான்ஸ் ஆட்டம் டிரா

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் - போர்ச்சுகல், பிரான்ஸ் ஆட்டம் டிரா
x
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் மற்றும் பிரான்ஸ் அணிகள், நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. எஃப் பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில், இவ்விரு அணிகளும் மோதிக் கொண்டன. ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல் அடித்து, தங்கள் அணியை முன்னிலைப்படுத்தினார். பதிலுக்கு, பிரான்ஸ் வீரர் பென்சமே அடுத்தடுத்து 2 கோல் அடிக்க, பிரான்ஸ் முன்னிலை பெற்றது. இருப்பினும், 2-வது பாதியில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்து அதனை சமன் செய்தார். இதனால், 2-க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா ஆனது. புள்ளிகளின் அடிப்படையில் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.

Next Story

மேலும் செய்திகள்