தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா - சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்
x
மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவை தொடர்ந்து, தமிழ்நாட்டில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகைக் கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக 
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

கொரோனோ இரண்டாவது அலை பரவல் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில்  மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வில் ஆயிரத்து 159 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

554 மாதிரிகளின் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் 386 மாதிரிகள் டெல்டா வகை உருமாறிய கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இவர்களில் 40 பேருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த டெல்டா பிளஸ் வகை கொரோனாவால், தமிழ்நாட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

மேலும் 21 மாதிரிகள் எந்த ஒரு வகைபாட்டிலும் உறுதி செய்ய முடியவில்லை.  
மீதமுள்ள 605 மாதிரிகளில், மரபணு குறித்த ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. . 


Next Story

மேலும் செய்திகள்