ஒலிம்பிக் கட்டுப்பாடுகள் - இந்தியா கண்டனம்

ஒலிம்பிக் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய ஒலிம்பிக் அமைப்பு நியாயமற்றது என விமர்சித்துள்ளது.
ஒலிம்பிக் கட்டுப்பாடுகள் - இந்தியா கண்டனம்
x
ஒலிம்பிக் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை இந்திய ஒலிம்பிக் அமைப்பு நியாயமற்றது என விமர்சித்துள்ளது. இந்தியா உள்பட கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளுக்கு ஒலிம்பிக் தொடரை நடத்தும் ஜப்பான் அரசு சில கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, வீர‌ர்கள் தாங்கள் விளையாட உள்ள இடத்திற்கு போட்டிக்கு 5 நாட்களுக்கு முன்பாகவே அனுமதிக்கப்பட உள்ளனர். ஜப்பானுக்கு வருவதற்கு முன் ஒரு வாரம் தொடர்ந்து தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜப்பான் வந்த பின் 3 நாட்கள் யாருடனும் தொடர்பில்லாமல் தனித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், மிகவும் முக்கியமான அந்த நாட்களில், பயிற்சி ஏதும் இல்லாமல், தனித்திருப்பது வெற்றியை பாதிக்கும் என இந்தியா கூறியுள்ளது. இவ்வாறு கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பாரபட்சம் காட்டுவது நியாயம் அற்றது என இந்திய ஒலிம்பிக் அமைப்பு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்