ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண்... - யார் இந்த நேத்ரா கும‌ண‌ன்?

ஒலிம்பிக் போட்டி தொடர் நெருங்கிகொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பார்த்து வருகிறோம்...
ஒலிம்பிக் போட்டியில் தமிழ் பெண்... - யார் இந்த நேத்ரா கும‌ண‌ன்?
x
இன்று, ஒலிம்பிக்கில் பாய்மர படகு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் பெண்ணாக, தேர்வாகியிருக்கும் தமிழக வீராங்கணை நேத்ரா குமண‌ன் பற்றி பார்க்கலாம்... ஹாக்கின்னு சொன்னா ஆ.. ஒலிம்பிக்லயே ஏகப்பட்ட மெடல் வாங்கிருக்கோம்... தயான் சந்த், தன்ராஜ் பிள்ளைனு பல லெஜெண்ட்ஸ் உருவான கேம் அப்டி இப்டினு நிறைய ஞாபகத்துல வரும்... 
துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் இந்த போட்டிங்கல்ல கூட ஏதோ ஒன்னு ரெண்டு மெடல் ஜெயிச்சது நியாபகத்துக்கு வரலாம்... ஆனா படகு போட்டினு சொன்னா... கேரளாவ தாண்டி நம்ம மைண்டு போகாது... காரணம் அதெல்லாம் வெஸ்டர்ன் கன்ட்ரீஸ் கேம் பா... அங்கலாம் அலை கம்முனு இருக்கும் சோ அந்த நாட்டு ப்ளேயர்ஸ் ஜாலியா விளையாடுவாங்க... நம்ம ஊர்ல கடல் அலை கூட நம்மல மாதிரியே ஆக்ரோஷமா இருக்கே... இதுல எங்க ப்ராக்டீஸ் பன்னி ஒலிம்பிக்ல செலக்ட் ஆறது இப்டி நினைச்சிட்டு இதுவரைக்கும் வேணும்னா ஒலிம்பிக்ல படகு போட்டியே பாக்காம இருந்துருக்கலாம்... ஆனா.. இந்த தடவ மொத்த இந்தியாவும் படகு போட்டியவும் பார்க்கலாம்.. மெடலயும் எதிர்பார்க்கலாம்... குறிப்பா நம்ம தமிழ் மக்கள் போட்டிய பாத்தே ஆகனும்...ஏன்னா 125 வருஷ ஒலிம்பிக் ஹிஸ்டரில மொதல் முறையா ஒரு பெண் பாய்மர படகு போட்டிக்கு செலக்ட் ஆகி இருக்காங்க... யோசிச்சி பாருங்க... 125 வருஷத்துல இதுவரைக்கும் இந்தியால இருந்து செலக்ட் ஆனது மொத்தமே 9 பேர் தான்... எல்லாருமே ஆண்கள் தான்...இதுல நமக்கு என்ன பெருமைனா, இப்படி சாதனையோட செலக்ட் ஆகி இருக்குற பெண் , ஒரு தமிழச்சி... ஆமாங்க நம்ம சென்னையை சேர்ந்த அந்த வீராங்கனையோட பேரு நேத்ரா குமண‌ன்...வாங்க ஒலிம்பிக் கமிட்டியோட அதிகாரப்பூர்வ இணையதளத்துல நம்ம ஊர் வீராங்கனை நேத்ராவ பத்தி ஒரு கட்டுரை எழுதிருக்காங்க.. அத பாக்கலாம்... ஆகஸ்ட் 21 ,1997 ல பிறந்த நேத்ரா குமண‌னுக்கு இப்போ வயசு 23... ஆனா 2009 ல தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்துன டிரைனிங் செஸ்ஸன்ல  இருந்தே அவங்களோட கேரியர் ஸ்டார்ட் ஆகுது... அப்போ நேத்ரா கும‌ணனுக்கு வயசு வெறும் 12... இதுபோக டென்னிஸ், பேஸ்கட் பால், சைக்ளிங், பரத நாட்டியம்னு பல வித்தைகள கத்து வச்சிருக்காங்க நேத்ரா... 

சென்னைல இருக்குற எஸ்.ஆர்.எம் காலேஜ்ல இஞ்சினியரிங் படிச்சிட்டு இருக்குறப்போ, ரெண்டு தடவ நேஷ்னல் சாம்பியன் ஆகி இருக்காங்க நேத்ரா.... நேத்ராவோட தம்பி நவீனும் பாய்மர படகு போட்டி பிளேயர் தானாம்... தம்பியவும் டிரைனிங் பன்னி நேஷ்னல் லெவல் பிளேயரா உருவாக்கிருக்காங்க நேத்ரா...  ஓமன்ல நடந்த முஸானா பாய்மர படகு போட்டில லேசர் ரேடியல் பிரிவுல பார்ட்டிசிபேட் பன்ன நேத்ரா, ரெண்டாவது இடத்த புடிச்சாங்க.. இந்த வெற்றி தான் நேத்ராவ ஒலிம்பிக் வரைக்கும் கொண்டு போய்ருக்கு... ஒலிம்பிக் போட்டி ஜூலை 23 ல தொடங்குது... நேத்ராவோட பாய்மர படகு போட்டி 25 ந்தேதி தொடங்குது... இன்னொரு சாதனை என்ன‌ன்னா, நேத்ரா தான் இந்தியால இருந்து முதல் முதலா 3 விதமான பாய்மர படகு போட்டில கலந்துக்குற வீராங்கனை... லேசர் ரேடியல், லேசர் ஸ்டான்டார்டு, 49 இ.ஆர்னு 3 விதமான போட்டிலயும் கலந்துக்க போறாங்க நேத்ரா.. அதே மாதிரி 2020 ஜனவரில மியாமில நடந்த ஹெம்பல் உலக கோப்பைய இங்க சொல்லவேண்டியிருக்கு...  நேத்ராவ உலகமே திரும்பி பாக்க வைச்ச ஒரு போட்டி அது..  அந்த போட்டில வெண்கல பதக்கம் ஜெயிச்ச நேத்ரா,  எங்க நாட்டுலயும் பாய்மர படகு போட்டி வீர‌ர், வீராங்கனைகள்லாம் இருக்கோம்னு கெத்தா சொல்லிருக்காங்க... அப்பறம் ஸ்பெயின்லயே தங்கி, ஹங்கேரி நாட்டு வீர‌ர் தாமஸ் எஸ்ஸஸ் கிட்ட பயிற்சி பெற்று வர்ராங்க நேத்ரா... இவர்கிட்ட பயிற்சிக்கு போனதுக்கு அப்பறம் நேத்ராவோட விளையாட்டு நுணுக்கம் நிறையவே மாறி இருக்குறதா சொல்றாங்க... முஸானா போட்டிலயும், எல்லாரும் போட்டில முதல்ல வர்ரதுலயே குறியா இருக்கும் போது, நேத்ரா ஒவ்வொரு போட்டிலயும் கொஞ்ச கொஞ்சமா புள்ளிய ஏத்தி, மொத்த கவுண்ட் ல ரெண்டாவது இடத்த புடிச்சாங்க...

இதே டிரிக் இன்னும் நல்லா வொர்க் ஆனா, நம்ம நாட்டுக்கு மெடல் கன்பார்ம்...






Next Story

மேலும் செய்திகள்