இந்திய அணியின் கடந்த கால சாதனைகள்...- உலக நாடுகளை ஓட விட்ட தருணங்கள்...

ஒலிம்பிக் போட்டியை நெருங்கி கொண்டிருக்கும் வேலையில், ஒரு காலத்தில் எப்படி இருந்த இந்திய அணி, இன்று எப்படி மாறிப்போயிருக்கிறது என்பதை உங்கள் பார்வைக்கு தருகிறோம்...
இந்திய அணியின் கடந்த கால சாதனைகள்...- உலக நாடுகளை ஓட விட்ட தருணங்கள்...
x
பரப்பளவில் 7 வது இடம்... மக்கள் தொகையில் 2 வது இடம்... ஆனால், ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெறும் இடமோ 50க்கும் மேல்... சில லட்சம் மக்கள் தொகையை கொண்ட சின்னஞ்சிறு தீவுகள் கூட இந்தியாவை விட அதிக பதக்கங்களை வென்றுவிடுகின்றன.... கடந்த 2016 ஆம் ஆண்டில் மங்கோலியாவுடன் பகிர்ந்து கொண்டு தான் 67 வது இடத்தையே பிடித்த‌து இந்தியா...இப்படி ஒலிம்பிக் போட்டியில் பரிதாப நிலையில் இருக்கும் இந்தியா தான் ஹாக்கி போட்டியில் அதிக தங்கம் வென்ற நாடு என்ற பெருமையை இன்றுவரை தக்க வைத்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா...? ஆம்.. ஒலிம்பிக்கில் இந்தியாவின் ஆகப்பெரும் ஆறுதல் ... மன்னிக்கவும் ஒரு காலத்தில் ஆறுதலாக இருந்த‌து இந்த ஹாக்கி போட்டி....1928 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியும் இடம்பெற்றது. பங்கேற்ற முதல் ஆண்டிலே தங்க பதக்கம் இந்தியா வசம்...  அதன் பின் 1956 ஆம் ஆண்டு வரை, தொடர்ந்து 6 முறை தங்க பதக்கம்... ஹாக்கி என்றால் இந்தியா தான் என்றானது... மற்ற நாடுகள் 2 வது இடத்திற்கே போட்டி போடும்... எந்த அணி வந்தாலும் தூசி தட்டுவதை போல தட்டிவிட்டு, முதல் இடத்தில் பட்டா போட்டு உட்கார்ந்திருந்த காலம் அது...இன்று பதக்க பட்டியலில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவை1932 ஆம் ஆண்டு துவம்சம் செய்த சம்பவத்தை இங்கு நினைவு கூற வேண்டும்... 24 க்கு 1 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவை ஊதி தள்ளியது இந்தியா... இதில் வேடிக்கை என்னவென்றால், இந்திய அணியின் கோல் கீப்பர் ரசிகர்களுக்கு ஆட்டோ கிராப்ட் போட்ட நேரத்தில் தான் அந்த ஒரு கோலையும் போட்டார்கள் அமெரிக்க அணியினர்...
1960 ல் சில்வர், மீண்டும் 1964ல் தங்கம், 68 மற்றும் 72ல் வெண்கலம் என இந்தியாவின் வெற்றிப்பாதையில் மேடு பள்ளங்கள் வரத்தொடங்கின.... ஆனால், அதன் பின்... மொத்தமாக அதலபாதாளத்திற்கே சென்றுவிட்டது இந்தியா... ஆம் 1980 ஆம் ஆண்டுக்கு பின், 40 ஆண்டுகளில் இந்தியா முதல் 5 இடத்திற்குள் வருவதற்கே போராடி வருகிறது. குறிப்பாக 2008 ஆம் ஆண்டில் இந்திய அணி தகுதிச்சுற்றிலே வெளியேறி ரசிகர்களை கலங்கடித்த‌து. 80 ஆண்டுகால ஹாக்கி வரலாற்றில் இந்தியா கண்டிராத சோகம் அது...
இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நிலைமை வேறாக உள்ளது... ஆண், பெண் என இரு பிரிவு ஹாக்கி அணியும் நல்ல பார்மில் உள்ளதாகவே தோன்றுகிறது. 
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஆண் பெண் இரு பிரிவிலும் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது இந்தியா... அதிலும் குறிப்பாக பெண்கள் பிரிவு இன்று ஒலிம்பிக் நடக்கும் இதே ஜப்பான் மண்ணில் தான் கோப்பையை வென்றிருந்த‌து. 2018ல் நடைபெற்ற ஆசிய சாம்பியன் கோப்பை விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவு தங்கமும், பெண்கள் பிரிவு வெள்ளியும் வென்றன.அதன் பின் தற்போது டோக்கியோ உலக கோப்பைக்கு தயாராகியுள்ள இந்திய அணி, வெற்றி பெற்று, அதனை கொரோனா முன்களபணியாளர்களுக்கு சமர்ப்பிப்போம் என கூறியுள்ளது. 
கடந்த ஆண்டுகளை போலவே காத்துக்கிடக்கின்றனர் ரசிகர்கள்... வின்டேஜ் இந்திய அணியை எப்போது பார்ப்போம் என்று... 





Next Story

மேலும் செய்திகள்